|
1978இன் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள கட்டமைப்புக்குள் ஸ்ரீலங்காவின் பல்கலைக்கழக முறைமை செயற்படுகிறது. மேற்படி சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்களில் உள்ள பட்டதாரிப்பயிற்சி நெறிகளுக்கு அனுமதிக்காக மாணவர்களை தெரிவு செய்தல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் (ப.மா.ஆ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்ஙனமே, ப.மா.ஆ தற்போது பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள 14 தேசியப் பல்கலைக்கழகங்களுக்கும் மற்றும் 4 நிறுவனங்களுக்கும் பட்டதாரி பயிற்சி நெறிகளுக்கான அனுமதிக்காக மாணவர்களைத் தெரிவுசெய்கிறது. வருடாந்தம், உள்ளூர் தராதரங்களுடன் மாணவர்களை அனுமதிப்பதற்கு மேலதிகமாக பட்டதாரி மானிப் பட்டங்களுக்கு இட்டுச் செல்லும். பட்டதாரிப் பயிற்சி நெறி படிப்புகளைத் தொடர்வதற்கு வெளிநாட்டுத் தராதரமுள்ள ஒரு கட்டுப்பட்ட எண்ணிக்கையான மாணவர்களுக்கு அனுமதியளிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதி கொள்கை கற்கை பயிற்சிநெறிகள், மற்றும் ஒவ்வொரு கற்கை, பயிற்சி நெறியின் கீழ் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களின் எண்ணிக்கை, வேறுபட்ட கற்கை நெறிகளின் கீழ் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பாடச் சேர்க்கைகள் மற்றும் ஒவ்வொரு நிர்வாக மாட்டத்திற்கும் வெவ்வேறான பயிற்சி நெறிகளுக்கான தேவைப்படும் குறைந்த புள்ளிகள் ஆகியவை மீதான தகவல்களை இந்தப்பக்கம் வழங்குகின்றது. அனுமதிகள் பிரிவைத் தொடர்புகொள்ள மின்னஞ்சல் மூலமாக admission@ugc.ac.lk |




