தூர நோக்கு
மிகச் சிறந்த இலங்கைக்காக / உலகத்திற்காக அறிவுசார் தலைமைத்துவத்தை வழங்குதல்
செயற்பணி
சமூகம், சுற்றாடல் மற்றும் நிதி சார்ந்த இலக்குகளை வெற்றிகொள்வதற்கு ஆர்வம் காட்டும் அறிவார்ந்த தலைவர்களை உருவாக்குவதற்கு, அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களின் பல்ம்மிக்க ஒருங்கிணைப்பு முறைமை ஊடாக உயர் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமான ஆராய்ச்சிகள், தரமான கற்பித்தல் மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மற்றும் உயர் தரத்திலான இளமாணிப் பட்டங்கள், பட்டப்பின் படிப்புக்கள் மற்றும் தொழில் கல்வி என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு தேவையான முகாமைத்துவம் மற்றும் நல்லாளுகையை ஏற்படுத்தல்.
இலக்குகள்
-
அரச துறையின் உயர்கல்விக்கான வாய்ப்புக்களை சமமான வகையில் அதிகரித்தல்
-
21 ஆம் நூற்றாண்டில் பிரஜையொருவருக்குத் தேவையெனக் கருதப்படும் திறன்கள் மற்றும் அறிவை மாணவர்களிடத்தில் விருத்தி செய்வதற்காக நிதியை ஒதுக்கீடு செய்வதனூடாக அரச உயர்கல்வி நிறுவகங்களுக்கு வசதிகளை வழங்குதல்.
-
உலகளாவிய சூழலில் மாணவர்களுக்கு வாழ்நாள் பூராவும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முடியுமான வகையில் நிகழ்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சிகள் மற்றும் தபுத்தாக்கங்களின் ஊடாக அரச உயர்கல்வி நிறுவகங்களின் கல்வித் தரங்களில் சிறப்புத் தன்மையை விருத்தி செய்தல்
-
வினைத்திறன்மிக்க மற்றும் தரமான மனித வளங்கள், சிறப்பான வசதிகள் மற்றும் நிலைபேறான /பசுமை எண்ணக்கருக்கள் ஊடாக அரச உயர்கல்வி நிறுவகங்களின் கல்வி நடவடிக்கைகளின் தரம் மற்றும் அளவு ரீதியிலான தரநிலைகளை உறுதிப்படுத்தல்.
-
பாதுகாப்பான மற்றும் நிலையான முறைமைகள் மற்றும் பரஸ்பர பயன்மிக்க தரப்புக்களின் தொடர்புகள் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்தைப் பலப்படுத்தல்.