YOUAREHERE எம்மை பற்றி ஆணைக்குழு உறுப்பினர்கள்

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka

Prof.Premakumara திரு. பிரேமகுமார டி சில்வா கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதியும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவில் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமாவார். பேராசிரியர் சில்வா அவுஸ்திரேலியாவின் ‘டீகின்’ பல்கலைக்கழகத்தில் மதிப்புக்குரிய ஆராய்ச்சிப் பேராசிரியரும் ஐக்கிய இராச்சியத்தின் பர்மின்ஹம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினருமாவார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாவது பிரதித் துணைவேந்தர், சிரேஷ்ட மாணவர் ஆலோசகர், கற்கைப் பிரிவுத் தலைவர் மற்றும் அரச நிறுவனங்களின் பணிப்பாளர் பதவிகள் உட்பட பல நிர்வாகம் சார்ந்த பதவிகளை வகித்துள்ளார்.
அவர் புகழ்பெற்ற சர்வதேச வெளியீட்டாளர்களுடன் ஆங்கிலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், புத்தக அத்தியாயங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன் உள்ளூர் மொழிகளிலும் வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். அவர் பிரிட்டிஷ் அகாடமி /ESRC, அமெரிக்கன் அகாடமி ஒஃப் ரிலிஜின், சேர் ராட்க்ளிஃப் - பிரவுன் மற்றும் பிரித்தானியாவின் ரோயல் மானுடவியல் நிறுவகத்தின் சேர் ரேமண்ட் ஃபர்த் அங்கத்துவம், எடின்பரோ பல்கலைக்கழகத்தின் ''Sir Ernest Cassell Educational Trust merit'' விருது மற்றும் நியூயோர்க்கின் மானுடவியல் ஆராய்ச்சிக்கான ''Wenner-Gern Foundation Award'' உட்பட பல மதிப்புமிக்க சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

2016 இல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான துணைவேந்தர் விருதையும், 2016 மற்றும் 2017 சிறப்பு ஆராய்ச்சிக்கான செனட் விருதையும் பேராசிரியர் சில்வா வென்றார். 2018 இல் அவர் இலங்கையில் மானுடவியல், அழகியல் மற்றும் சமூகவியல் துறையில் மிகச் சிறந்த சிரேஷ்ட ஆராய்ச்சியாளருக்கான CVCD (துணைவேந்தர் மற்றும் பணிப்பாளர்களுக்கான குழு) சிறப்பு விருதை வென்றமை முக்கிய விடயமாகும். பேராசிரியர் சில்வா அவர்கள் 2018 ஆம் ஆண்டின் சிறந்த கல்வி சார்ந்த புத்தகங்கள் மொழிபெயர்ப்புக்கான அரச சாகித்திய விருதையும் வென்றார்.

 

புதிய தகவல்கள்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

விசேட அறிவித்தல்கள்

அளிப்புக்கள் மற்றும் புலமைப்பரிசில்கள்
நிகழ்வுகள்

1 மானிடயவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்துறையின் நூற்றாண்டு வைபவம் - இலச்சினை மற்றும் இணையத்தளத்தை வெளியிடல்
1 2020 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/21 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான ஊடகக் கலந்துரையாடல்
1 2019 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2019/20 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான காணொளி (வீடியோ)
1 இலங்கை ஔடதக் கன்றுகள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புத் திட்டம்
1 கௌரவ கல்வி அமைச்சரின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விஜயம்
 2 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிகளைப் பொறுப்பேற்பு
 2 INQAAHE/APQN மாநாடு 2019, இலங்கை
 2 Presentation made by Chairman, UGC at the General Assembly of the INQAAHE biennial conference in Bahrain
 2 புதிய கட்டிடத் திறப்பு விழா

செய்திகள்

தகைமைகளை அங்கீகரித்தல்


தகைமைகளை
அங்கீகரித்தல்