YOUAREHERE எம்மை பற்றி ஆணைக்குழு உறுப்பினர்கள்

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka

சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன

Senior Prof. A K W Jayawardane பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன அவர்கள் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியராவார். அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால முன்னாள் துணைவேந்தர் மற்றும் தேசிய விஞ்ஞான மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமுமாவார். அவர், 1983 டிசம்பர் மாதம் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் முதல் வகுப்பு BSc பொறியியல் சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டதுடன் 1986 இல் ஐக்கிய அமெரிக்காவின் ''Loughborough'' தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்து நிர்மாணத்துறையில் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தையும், 1990 ஜனவரி மாதம் அதே பல்கலைக்கழகத்தில் நிர்மாணங்கள் முகாமைத்துவத்தில் கலாநிதிப் பட்டத்தையும் (Phd) பெற்றுக்கொண்டுள்ளார்.
அவர் பட்டயப் பொறியியலாளர், சர்வதேச தொழில்துறை பொறியியலாளர், இலங்கை பொறியியல் நிறுவகம், இலங்கை கருத்திட்ட முகாமையாளர்கள் நிறுவனம், இலங்கை தேசிய விஞ்ஞான அகாடமி போன்ற நிறுவனங்களின் அங்கத்தவராவார். அத்தோடு, ‘Sri Lanka Association for Advancement of Science’ சங்கத்தின் வாழ்நாள் அங்கத்தவராவார். இலங்கையின் பணிப்பாளர்கள் நிறுவனத்தின் பட்டதாரி அங்கத்தவர் மற்றும் ‘The Society of Structural Engineers Sri Lanka’ சங்கத்தின் அங்கத்தவராவார். மேலும், அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 'NDB Bank Endowed Professor in Entrepreneurship' பதவியை வகித்ததுடன், இலங்கை பொறியியல் நிறுவகத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

அவர் தேசிய கல்வி நிறுவகம், நிர்மாணப் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், முகாமைத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவகம், நிதிசார் கற்கைக்கான மிலோதா அகாடமி, நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகம், தேசிய விஞ்ஞான அறக்கட்டளை, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் நிர்மாணக் கைத்தொழில்கள் அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய நிறுவனங்களின் நிருவாக சபைகள் / சபைகளின் அங்கத்தவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, அவர் இலங்கை பொறியியல் கவுன்சிலின் முகாமைத்துவ சபையின் அங்கத்தவராக இருப்பதுடன், கொமர்ஷல் வங்கி மற்றும் சியரா கேபிள்ஸ் பீ.எல்.சி ஆகியவற்றின் நிறைவேற்று அல்லாத பணிப்பாளர் சபை அங்கத்தவருமாவார். அவர் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கல்விக் கொள்கை உருவாக்கம் தொடர்பான மேலும் பல தேசிய குழுக்களில் பணியாற்றியுள்ளார்.

அவர், சர்வதேச லயன்ஸ் கழகங்கள் - 306A1 மாவட்டத்தினால் பொறியியல் பிரிவின் கீழ் 2013 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட ''National Achiever’s Award'', IESL ஜனாதிபதி விருது - 2012 மற்றும் கல்விக்காக ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக ஆசிய கல்விச் சிறப்பு விருது - 2016, கல்வித் தலைமைத்துவத்திற்காக ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக இலங்கை கல்வி தலைமைத்துவ விருது - 2017, கல்விக்கான சிறந்த பங்களிப்பிற்காக உலக கல்வி காங்கிரஸ் மற்றும் CMO Asia இனால் வழங்கப்பட்ட இலங்கை கல்வி தலைமைத்துவ விருது - 2018 மற்றும் IESL இனால் பொறியியல் விஞ்ஞானத்தின் செயன்முறை கீர்த்திக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த, மிகவும் மதிப்புக்குரிய வாழ்நாள் விருதான "Eminence in Engineering" - 2018 உள்ளிட்ட மேலும் பல விருதுகளை வழங்கி கெளரவிக்கப்பட்டவராவார்.

 

 

புதிய தகவல்கள்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

விசேட அறிவித்தல்கள்

அளிப்புக்கள் மற்றும் புலமைப்பரிசில்கள்
நிகழ்வுகள்

1 மானிடயவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்துறையின் நூற்றாண்டு வைபவம் - இலச்சினை மற்றும் இணையத்தளத்தை வெளியிடல்
1 2020 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/21 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான ஊடகக் கலந்துரையாடல்
1 2019 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2019/20 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான காணொளி (வீடியோ)
1 இலங்கை ஔடதக் கன்றுகள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புத் திட்டம்
1 கௌரவ கல்வி அமைச்சரின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விஜயம்
 2 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிகளைப் பொறுப்பேற்பு
 2 INQAAHE/APQN மாநாடு 2019, இலங்கை
 2 Presentation made by Chairman, UGC at the General Assembly of the INQAAHE biennial conference in Bahrain
 2 புதிய கட்டிடத் திறப்பு விழா

செய்திகள்

விசேட இடையிணைப்பிகள்


தகைமைகளை
அங்கீகரித்தல்