YOUAREHERE எம்மை பற்றி ஆணைக்குழு உறுப்பினர்கள்

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka

பேராசிரியர் (திருமதி) வசந்தி அரசரத்ணம்

Prof (Ms.) Vasanthy Arasaratnam

 

 

உயிரியல் இரசாயன விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர், உயிரியல் இரசாயன விஞ்ஞான கற்கைத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். முன்னாள் துணைவேந்தர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மார்ச் 2011 முதல் மே 2017 வரை.

இலங்கை மன்றத்தின் பணிப்பாளர் சபையின் முன்னாள் அங்கத்தவர்; தேசிய விஞ்ஞான மன்றத்தின் நிருவாக சபையின் அங்கத்தவர்; பொதுநலவாய அமைப்பு பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் நிருவாக சபையின் முன்னாள் நிறைவேற்று அங்கத்தவர்; பொதுநலவாய அமைப்பு பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் நிருவாக சபையின் அங்கத்தவர்; .இந்தியாவின் புதுடில்லி தெற்காசிய பல்கலைக்கழக சபையின் முன்னாள் அங்கத்தவர்; முன்னாள் தலைவர், ஆராய்ச்சிக் குழு, பனை ஆராய்ச்சி நிறுவனம், பனை அபிவிருத்தி சபை;

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி; உயிரியல் இரசாயனவியல் கற்கைப் பிரிவின் முன்னாள் தலைவர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டக் கற்கைகள் பீடத்தின் உயிரியல் விஞ்ஞான கற்கைகள் சபையின் தலைவர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டக் கற்கைகள் பீடத்தின் மருத்துவ விஞ்ஞானம் மற்றும் விவசாய கற்கைகள் சபையின் அங்கத்தவர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆளணி அபிவிருத்தி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர்;

வருகைதரு விரிவுரையாளர், உணவு இரசாயனவியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பப் பாடநெறிகள், உயிரியல் தொழில்நுட்பப் பிரிவு, லுன்ட் பல்கலைக்கழகம், ஸ்வீடன்; வருகைதரு விரிவுரையாளர், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர் இரசாயனவியல் நிறுவகம், கொழும்புப் பல்கலைக்கழகம்.

சிறப்புப் பட்டத் தேர்வுநாடிகளின், M.B.B.S., M.Sc., M.Phil. மற்றும் கலாநிதிப் பட்ட மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்பார்வை செய்தல்; சர்வதேச மற்றும் தேசிய அளவில் M.Phil. மற்றும் கலாநிதிப் பட்ட விண்ணப்பதாரிகளின் தேர்வாளராக நடவடிக்கை மேற்கொள்ளல்; தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு நடுவராக நடவடிக்கை மேற்கொள்ளல், சுமார் 5 Ph.D மாணவர்கள், சுமார் 13 M.Phil மாணவர்கள் மற்றும் M.Sc. சுமார் 12 மாணவர்கள் மேற்பார்வைக்குட்படுத்தப்பட்டனர். மொத்தம் 126 ஆய்வுக் கட்டுரைகள், 310 கருத்தரங்கு அறிக்கைகள் மற்றும் 3 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

IRQUE திட்டத்தில் (உலக வங்கி திட்டம்) அடிப்படை முன்மொழிவுகளை எழுதுதல் சம்பந்தமாக உள்ளூர் பயிற்சியாளர்; முன்மொழிவு மதிப்பாய்வாளர்களுக்கான தேசிய பயிற்சியாளர்; அடிப்படை முன்மொழிவுகள் மற்றும் விரிவான திட்டங்களுக்கான தேசிய மதிப்பீட்டாளராக நடவடிக்கை மேற்கொள்ளல்; HETC திட்டத்திற்கான தேசிய மதிப்பீட்டாளர் (உலக வங்கி திட்டம்); AHED திட்டத்திற்கான தேசிய மதிப்பீட்டாளர் (உலக வங்கி திட்டம்); தர காப்பீட்டுக் கவுன்சின் நிறுவனம்சார் மதிப்பாய்வாளர்; பல்கலைக்கழக மானியக் குழுவின் தரக் காப்பீட்டுக் கவுன்சிலின் நிகழ்ச்சித் திட்டங்கள் மதிப்பாய்வாளராக நடவடிக்கை மேற்கொள்ளல்.

தேசிய ஆராய்ச்சிக் கவுன்சிலின் ஆராய்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்தல்; இரசாயனவியல் பற்றிய சர்வதேச நிகழ்ச்சித் திட்டம் (IPICS), சுவீடன் (2007- 2010); Sida/SAREC, கருத்திட்டப் பிரதானி, சுவீடன் (2007- 2010);TWAS அளிப்பு; IFS அளிப்பு, சுவீடன்; தேசிய விஞ்ஞான மன்றத்தின் (NSF) சில அளிப்புக்கள்.

 

 

 

புதிய தகவல்கள்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

விசேட அறிவித்தல்கள்

அளிப்புக்கள் மற்றும் புலமைப்பரிசில்கள்
நிகழ்வுகள்

1 மானிடயவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்துறையின் நூற்றாண்டு வைபவம் - இலச்சினை மற்றும் இணையத்தளத்தை வெளியிடல்
1 2020 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/21 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான ஊடகக் கலந்துரையாடல்
1 2019 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2019/20 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான காணொளி (வீடியோ)
1 இலங்கை ஔடதக் கன்றுகள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புத் திட்டம்
1 கௌரவ கல்வி அமைச்சரின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விஜயம்
 2 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிகளைப் பொறுப்பேற்பு
 2 INQAAHE/APQN மாநாடு 2019, இலங்கை
 2 Presentation made by Chairman, UGC at the General Assembly of the INQAAHE biennial conference in Bahrain
 2 புதிய கட்டிடத் திறப்பு விழா

செய்திகள்

தகைமைகளை அங்கீகரித்தல்


தகைமைகளை
அங்கீகரித்தல்